சுண்டக்காய் ஒட்டுச்செடியில் கத்திரிக்காய் சாகுபடி
சுண்டக்காய் வேர் ஒட்டுச்செடியில், கத்திரிக்காய் சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.பழனி கூறியதாவது:காய்கறி, நெல், பழ வகைகளை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், சுண்டக்காய் வேர் ஒட்டுச்செடியில் கத்திரிக்காய் சாகுபடி செய்து வருகிறேன். சுண்டக்காய் வேர், ஆண்டு முழுதும் பசுமையாக இருப்பதால், கத்திரிக்காய் மூன்று ஆண்டு வரை மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கும். இதை, ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்தால், ஆண்டுதோறும் நடவு செய்யும் செலவு மிச்சப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: வி.பழனி,80980 53816.