உள்ளூர் செய்திகள்

நிலக்கடலைக்கு தேவை கந்தகம், சுண்ணாம்புச்சத்து

நிலக்கடலை பயிரின் வளர்சிதை மாற்றத்தில் கந்தகம், சுண்ணாம்புச்சத்துகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அமினோஅமிலம், புரத உற்பத்திக்கு இச்சத்துகள் அவசியம். மேலும் பச்சையம் உருவாவாதலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.நிலக்கடலையில் எண்ணெய் அளவு அதிகரிக்க கந்தகம் முக்கியமான ஒன்று. மேலும் தழைச்சத்து உபயோகிப்பு திறனையும் அதிகரிக்கிறது.கடலை விதை உருவாக்கத்தில் சுண்ணாம்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. கடலை விழுதுகள் மண்ணில் இறங்கிய உடன் இளம் காய்கள் சுண்ணாம்புச்சத்தை நேரடியாக உட்கிரகிக்க ஏதுவாக உள்ளது. இலை, தண்டு, வேர், விழுது ஆகியவை திறட்சியாக வளர உறுதுணை செய்கிறது. காய்களில் விதைப்பருப்பு திரட்சியாகவும் முதிர்ச்சி அடைவதற்கும் உதவுகிறது.75 சதவீத கந்தகம், சுண்ணாம்புச்சத்தை விழுதுகள் மற்றும் கடலை காய்கள் நேரடியாக எடுத்துக் கொள்கிறது. சுண்ணாம்புச்சத்து குறைபாட்டால் பொக்குகடலை உருவாகிறது. மானாவாரி நிலக்கடலை சாகுபடி உற்பத்தியில் ஜிப்சத்தை பயிரின் வயதுக்கு ஏற்றவாறு பிரித்து இட வேண்டும். அப்போது மண்ணில் ஈரம் இருக்க வேண்டும். மழைநீர் கிடைத்தால் பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளும். அதே நேரத்தில் அதிகமழை பெய்யும் பட்சத்தில் கரைந்து வீணாகி விடும்.இதைத் தவிர்க்க கந்தக சத்து பயிருக்கு சரியான நேரத்தில் கிடைக்க செய்ய எக்டேருக்கு 400 கிலோ ஜிப்சத்தை பிரித்து இடவேண்டும் மேலும் காலகஸ்த்தி நோய், காய் அழுகல், நூற்புழு பாதிக்கும் பகுதிகளுக்கு 200 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக விதைப்பதற்கு முன் இட வேண்டும்.மீதமுள்ள 200 கிலோவை பூக்கும் பருவத்தில் இட்டு மண் அணைத்தால் பயிர்கள் வாளிப்பாகவும் கடலை திரட்சியாகவும் வளரும். ஆரம்ப காலத்தில் ஜிப்சத்தை பிரித்து இடுவதால் விதை எளிதாக முளைத்து வரும்.- சுப்புராஜ் வேளாண் இணை இயக்குநர்வேளாண் துறை, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !