ஆண்டு முழுதும் மகசூலுக்கு உகந்தது வியட்நாம் பலா
ஆண்டு முழுதும் மகசூல் கொடுக்கும் வியட்நாம் பலா சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:மலை மண் சார்ந்த செம்மண் நிலத்தில், ஆண்டு முழுதும் மகசூல் கொடுக்கும் வியட்நாம் பலா வரப்பு பயிராக சாகுபடி செய்துள்ளேன்.இது, நம்மூர் மலை மண்ணின் சீதோஷண நிலை தாங்கி வளர்க்கிறது. ஒட்டு செடியாக இருப்பதால், ஒன்றரை ஆண்டில் மகசூல் கொடுக்க துவங்கி விடுகிறது.இந்த பலாவில், செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, பழங்களை காய்ப்புக்கு விட வேண்டும்.வியட்நாம் பலா மகசூல் வரும் போது, ஒரே நேரத்தில் காய்ப்புக்கு விட்டு விட்டால், அனைத்து பழங்களும் குறைந்த எடை மட்டுமே கிடைக்கும். குறைந்த எண்ணிக்கை பிஞ்சுகளை விட்டால், ஆண்டு முழுதும் மகசூல் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.வெங்கடபதி,93829 61000.