உள்ளூர் செய்திகள்

கோடை கால தீவனம் சீமை கருவேல காய்கள்

சீமை கருவேல காய்களை, ஆடுகளுக்கு தீவனமாக வழங்குவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார், உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:கோடை காலத்தில், ஆடுகளுக்கு தீவனம் தட்டுப்பாடு ஏற்படும். இது போன்ற நேரங்களில், கழிச்சல் மற்றும் உடல் சோர்வால் ஆடுகள் மற்றும் அதன் குட்டிகள் இறக்க நேரிடும்.இதை தவிர்க்க, அடர் தீவனங்கள், தாது உப்பு, குளிர்ந்த நீர் ஆகியவை ஆடுகளுக்கு தீவனமாக வழங்கலாம்.குறிப்பாக, சீமை கருவேல மரங்களின் காய்களை தீவனமாக வழங்கலாம். இது, கோடை காலத்தில், புல் தீவன தட்டுப்பாட்டினை சரி செய்யும். மேலும், சவுண்டல் மரத்தின் தழைகள், கொடுக்காபுளி மரங்களின் தழைகளை தீவனமாக வழங்கலாம்.இது, கோடை காலத்தில் ஆடுகளுக்கு தீவன தட்டுப்பாட்டினை சமாளிக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: முனைவர் கே.பிரேமவல்லி,97907 53594.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !