உள்ளூர் செய்திகள்

சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த கரைசல்

பாசி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையம் தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:நெல் வயல்களில், திரிப்ஸ் என அழைக்கப்படும் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் இலை மடக்குப்புழு ஆகிய தாக்குதல் ஏற்படும். குறிப்பாக, சொர்ணவாரி பருவத்தில், கோ- 55 நெல் ரகத்தில் குறைவாகவும், கே.என்.எம்., 1,638, மகேந்திரா- 606, எம்.டி.யு., 1,290 ஆகிய ரகங்களில் அதிகமாகவும் காணப்படுகின்றன.இதை கட்டுப்படுத்துவதற்கு, வயல்வெளிகளில் இருக்கும் பாசிகளை நன்கு கலைத்து விட வேண்டும். 1 ஏக்கருக்கு, 1 கிலோ காப்பர் சல்பேட் நீர் பாசனத்தில் கலந்து விட வேண்டும். காப்பர் சல்பேட் 0.2 சதவீதம் தெளிப்பான்கள் மூலமாக, 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்துவிட வேண்டும்.சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலை சமாளிக்க, 1 ஏக்கருக்கு 1 விளக்கு பொறிகள் அமைக்க வேண்டும். இமிடா குளோபிரிட் ஏக்கருக்கு, 100 மில்லி தெளிக்க வேண்டும். மேலும், காய்ச்சலும் பாய்ச்சலும் என்கிற முறையில் லேசான தண்ணீரை பாய்ச்ச வேண்டும்.இதுபோன்ற தொழில்நுட்பத்தை முறையாக கையாண்டால், நெல் பயிரில் கணிசமான மகசூல் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,திரூர் நெல் ஆராய்ச்சி மையம்,திருவள்ளூர்.97910 15355.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !