உள்ளூர் செய்திகள்

ஊறுகாய் வருவாய்க்கு இளஞ்சிவப்பு புளிச்சை கீரை

இளஞ்சிவப்பு நிற புளிச்சை கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:காய்கறி, கீரை உள்ளிட்ட பலவித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீத காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.மணல் கலந்த களிமண் நிலத்தில், இளஞ்சிவப்பு நிற புளிச்சை கீரை சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் மண்ணுக்கு அருமையாக மகசூல் கொடுக்கிறது.இந்த கீரையில் அதிக சத்துக்கள் நிறைந்து இருப்பதால், சந்தை வருவாய்க்கு பஞ்சமில்லை. இதை, கீரை உணவாகவும், ஊறுகாய்க்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த இளஞ்சிவப்பு நிற புளிச்சை கீரையை, ஊறுகாயாக மாற்றி விற்பனை செய்யும் போது இரட்டிப்பு வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.குகன், 94444 74428.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !