வறட்சியை தாங்கி வளரும் ரெட் நெல்லி ரக சாகுபடி
'ரெட்' ரக நெல்லி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை சாகுபடி செய்ய முடியும். இதுதவிர, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பிற நாடுகளின் பழங்களை மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். இது, நம்மூர் கோடை வெயில் மற்றும் மழை ஆகிய பருவ நிலைக்கு ஏற்ப தாங்கி வளர்கிறது.அந்த வரிசையில், வறட்சியை தாங்கி வளரக்கூடிய 'ரெட்' நெல்லி ரகம் சாகுபடி செய்யலாம். இது, நம்மூர் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப வளர்க்கிறது. இதில், அதிக மருத்துவ குணங்கள் இருப்பதால், சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. கணிசமான வருவாயும் கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.சசிகலா, 98419 86400.