உள்ளூர் செய்திகள்

கார்த்திகை பருவத்தில் தர்ப்பூசணி சாகுபடி

தர்ப்பூசணி சாகுபடிக்கு தரமான விதைகள் தேர்வு செய்வது குறித்து, விதை பரிசோதனை அலுவலர் பெ.ராஜகிரி கூறியதாவது: நம்மூர் கோடை வெயில் தாகத்தை தணிக்கும் பழ வகைகளில், தர்ப்பூசணி பிரதானமாக இடம் பிடிக்கிறது. இது போன்ற பழ சாகுபடிக்கு, தரமான விதைகளை தேர்வு செய்து நடலாம். குறிப்பாக, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சாகுபடி செய்வதற்கு உகந்த பருவம். இந்த பருவங்களில், டிராகன் கிங், அபூர்வா, மாதுரி, நாம்தாரி, அர்க்கா மானிக், அர்க்கா ஜோதி, அர்க்கா ஐஸ்வர்யா ஆகிய வெளிர் பச்சை நிற தர்ப்பூசணி விதைகளை விதைக்கலாம். மேலும், மெலோடி- - எப்-1, மேக்ஸ், சுகர் குயின் ஆகிய அடர் பச்சை நிற விதைகளை தேர்வு செய்து, பாத்தி கட்டி, குழிகளில் விதைக்கலாம். 1 கிலோ விதைகளுக்கு, 4 கிராம் டி-ரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் விதையுடன் நேர்த்தி செய்து விதைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பெ.ராஜகிரி, 98942 35782.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !