உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நடிகை ரன்யா ராவ் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு

நடிகை ரன்யா ராவ் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில், வருவாய் புலனாய்வு பிரிவு கொடுத்த தகவலின் அடிப்படையில், சி.பி.ஐ., தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.கர்நாடக வீட்டுவசதி துறை கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ். இவரது மகள் ரன்யா ராவ், 33; நடிகை. ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தியதாக, கடந்த 3ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் ரன்யா ராவை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.துபாய், அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து நகை கடத்தி வந்ததை, ரன்யா ராவும் ஒப்புக்கொண்டு உள்ளார். 'எங்கிருந்து தங்கம் கடத்தி வந்தேன் என்று உண்மையை கூறுகிறேன். 'ஜாமின் கிடைத்த பின், நீங்கள் எப்போது சம்மன் அனுப்பினாலும், விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன்' என்றும், விசாரணை அதிகாரிகளிடம் ரன்யா ராவ் கூறி உள்ளார்.இந்த வழக்கின் பின்னணியில் பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகள் தொடர்பு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், ரன்யா ராவை வைத்து, வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர்களை பிடிக்க, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், வருவாய் புலனாய்வு பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ரன்யா ராவ் தங்கம் கடத்தியது தொடர்பாக சி.பி.ஐ., நேற்று தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதனால், தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரன்யா ராவின் தந்தை ராமச்சந்திர ராவிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Venkatesan Srinivasan
மார் 09, 2025 20:24

இது போன்ற ஹை ப்ரொபைல் மாநில அதிகார உச்ச நிலையில் உள்ள மந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்புடைய நபர்களை குற்ற வழக்குகளில் விசாரிக்கும் போது சம்மந்தப்பட்ட மாநிலத்திலேயே வைத்து விசாரிக்காமல் கண்டிப்பாக வேறு மாநிலங்களில் கொண்டு சென்று விசாரிக்க வேண்டும். உள்ளூரில் வைத்து விசாரணை செய்யும் போது அவர்கள் தங்கள் தொடர்புகள் மூலம் புலன் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்க வாய்ப்புகள் அதிகம். விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள். இதற்காக தனியாக சட்டம் கொண்டு வர வேண்டும்.


N.Purushothaman
மார் 09, 2025 07:59

பணத்திற்காக எந்த இழிவான நிலைக்கும் செல்லலாம் என்கிற மனோபாவம் கொடூரமானது ...


நிக்கோல்தாம்சன்
மார் 09, 2025 07:17

அந்த பொண்ணு பக்கத்தில் இருப்பது யார் ?