உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதல்வரின் அலட்சியம் விஜயேந்திரா காட்டம்

முதல்வரின் அலட்சியம் விஜயேந்திரா காட்டம்

பெங்களூரு: அதிக கமிஷன் கேட்பதாக மாநில கான்ட்ராக்டர்கள் புகார் அளித்த விவகாரத்தில் முதல்வர் அலட்சியமாக செயல்படுவதாக, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா விமர்சனம் செய்துள்ளார்.இதுதொடர்பாக, 'எக்ஸ்' பக்கத்தில் விஜயேந்திரா வெளியிட்ட பதிவு:மாநிலத்தின் உண்மையான நிதி நிலை என்னவென்றால், காலியாக உள்ள அரசு கருவூலத்தில், மேம்பாட்டு பணிகளுக்கு ஒரு பைசா கூட இல்லை. கான்ட்ராக்டர்களுக்கு நிலுவையில் உள்ள பில்களை செலுத்தவும் பணம் இல்லை.கமிஷன் கொடுத்தால் தான், பில் தொகை செலுத்துவோம் என்று அதிகாரிகள் கூறுவதால், கான்ட்ராக்டர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதை உங்களிடம் நேரடியாக சந்தித்து கூறியுள்ளனர். இதற்கு தீர்வு காணாமல், இதற்கு காரணம் முந்தைய அரசு தான் காரணம் என்று கூறு, பொறுப்பை தட்டிக்கழிப்பது சரியல்ல.ஏப்ரல் மாதத்தில் நிலுவை பில் தொகையை கொடுப்பதாக கூறியுள்ளீர்கள். இத்தகைய நிலைமை, முந்தைய ஆட்சி காலத்தில் ஏற்பட்டதில்லை. யார் ஆட்சிக் காலத்தில் பணிகள் துவங்கியது என்பது முக்கியமல்ல.அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்த உங்களால், கான்ட்ராக்டர்களின் பில்களை செலுத்த முடியாதது துரதிர்ஷ்டவசமானது. பில்களை செலுத்த முடியாத சூழ்நிலையால், ஏற்கனவே, பல கான்ட்ராக்டர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் கருணை கொலை செய்ய கோரியுள்ளனர். வரும் நாட்களில் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ