உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கார்கே உத்தரவுக்கு மதிப்பு துணை முதல்வர் சிவா ஐஸ்

கார்கே உத்தரவுக்கு மதிப்பு துணை முதல்வர் சிவா ஐஸ்

பெங்களூரு: ''முதல்வர் பதவி குறித்து யாரும் பேச கூடாது என்ற, எங்கள் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயின் உத்தரவை நான் மதிக்கிறேன்,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.முதல்வர் பதவியில் இருந்து, சித்தராமையா எப்போது விலகுவார்? அந்த பதவியில் அமரலாம் என, துணை முதல்வர் சிவகுமார் காத்திருக்கிறார்.ஆனால் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்கள் சிலரின் பேச்சு, சிவகுமாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவரை, மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் முயற்சி நடந்தது. இதனால் கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டது.இதையடுத்து முதல்வர், தலைவர் பதவி குறித்து யாரும் பேச கூடாது. அனைவரும் வாயை மூடி கொண்டு வேலையை பாருங்கள் என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரித்தார். ஆனாலும் அவர் பேச்சை யாருமே கேட்பது இல்லை.இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, சிவகுமார் முதல்வர் ஆவார் என, கூறினார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து சிவகுமார் நேற்று அளித்த பேட்டியில், ''முதல்வர் பதவி குறித்து வீரப்ப மொய்லி தெரிவித்தது, அவரது சொந்த கருத்து. முதல்வர் பதவி மாற்றம் குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. கட்சி எனக்கு கொடுத்த பொறுப்பை நான் மேற்கொண்டு வருகிறேன். முதல்வர் பதவி குறித்து பேச கூடாது என்று, மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டார். அவரது உத்தரவை நான் மதிக்கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி