உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண் தொழிலாளர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்ற விவசாயி

பெண் தொழிலாளர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்ற விவசாயி

பெங்களூரு: தன்னிடம் விவசாய கூலியாட்களாக பணியாற்றும் பெண்களை, ஷிவமொக்காவில் இருந்து, கோவாவுக்கு சுற்றுலா அழைத்து சென்ற விவசாயியிக்கு பாராட்டு குவிந்தது.விஜயநகரா, ஹரப்பனஹள்ளியின் சிரகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி விஸ்வநாத். மாநில உளவுத்துறையில் ஏட்டாக பணியாற்றிய இவர், அந்த பணியை விட்டு விட்டு தனக்கு சொந்தமான 14 ஏக்கர் பாக்கு தோட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டார்.இவரது தோட்டத்தில், பெண்கள் கூலி வேலை செய்கின்றனர். நிரந்தரமாக தன் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு, ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்; அது மறக்க முடியாத பரிசாக இருக்க வேண்டும் என, விஸ்வநாத் விரும்பினார்.ஏழைகளுக்கு ஒரு முறையாவது, விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் பண வசதி இருக்காது. எனவே பெண் தொழிலாளர்களை, விமானத்தில் அழைத்து சென்று மகிழ்ச்சிப்படுத்த முடிவு செய்தார்.அதன்படி சில நாட்களுக்கு முன், அனைவரையும், ஷிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து, கோவாவின், தாபோலிமுக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்றிருந்தார்.இது குறித்து, விஸ்வநாத் கூறியதாவது:என் தோட்டத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் கனவை, நனவாக்கிய திருப்தி எனக்குள்ளது. விமானத்தில் பறக்க வேண்டும் என்ற, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினேன்.முதலில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, விமானத்தில் அழைத்து செல்ல ஆலோசித்தேன். ஆனால் விமான கண்காட்சி நடந்ததால், என் திட்டத்தை மாற்றினேன். நாங்கள் கோவாவுக்கு சென்றோம். ஷிவமொக்கா அருகில் உள்ள விமான நிலையம் என்பதால், அங்கிருந்து புறப்பட்டோம்.முதல் முறை விமானத்தில் ஏறிய பெண்கள், விமானம் டேக் ஆப் ஆகும் போது பயந்தனர். ஆனால் சுற்றுலா முடிந்து திரும்பும் போது, அவர்களிடம் பயம் இல்லை. மகிழ்ச்சியாக இருந்தனர்.நாங்கள் கோவாவின், காலங்குட், பாகா கடற்கரைக்கு சென்றோம். மான்டோபி ஆற்றில் படகு சவாரி செய்தோம். பனாஜி நகருக்கும் சுற்றுலா சென்றோம். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை கண்டு, எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.ஏட்டாக பணியாற்றி, விவசாயி ஆனதில் எனக்கு திருப்தி அளிக்கிறது. நான் விவசாயியான பின், ஆரோக்கியமான, நெருக்கடி இல்லாத வாழ்க்கை நடத்துகிறேன்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Muraleedharan.M
பிப் 26, 2025 10:18

சிறந்த விவசாயி . திறந்த மனம் கொண்டவர் .


Sathyan
பிப் 25, 2025 19:27

Great gesture


என்றும் இந்தியன்
பிப் 25, 2025 16:19

மிக்க நல்ல பணி. நல்ல எண்ணம். ஆனால் இதில் என்னுள் சில கேள்விகள் உள்ளது. 1 விவசாயி என்றால் யார் தோட்ட முதலாளி என்றால் யார் 2 எல்லா பெண்களும் ஒரே நிற ....சேலை uniform அப்படியென்றால் நாம் jewellery கடையில் ஒரே சேலை uniform பார்க்கின்றோம் அது கடை அதைப்போல இதுவும் விவசாய கடியா vivasayiyaa இல்லை பாக்கு கடை முதலாளியா.


chennai sivakumar
பிப் 25, 2025 08:10

இவருக்கு ஒரு ராயல் salute


Kalyanaraman
பிப் 25, 2025 07:57

ஒருவருக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்துவது மதிப்பில் அடங்காது. இயலாதவர்களுக்கு இயலும் வகையில் பரிசாக கொடுத்த விமான சுற்றுலாவுக்கு பாராட்டுக்கள்.


Sathyan
பிப் 25, 2025 07:49

இவரின் முயற்சியால் இவரிடம் வேலை பார்க்கிற ஆன்மாக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் உள்ளது. மகிழ்வித்து மகிழ்.