மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
16-Feb-2025
பெங்களூரு: விதான் சவுதாவில், இன்று மாலை 5:00 மணிக்கு 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட துவக்க விழா நடக்கிறது.முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். துணை முதல்வர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.சினிமா தொடர்பான ஐந்து புத்தகங்களை நடிகர் சிவராஜ்குமார் வெளியிடுகிறார். நடிகை பிரியங்கா மோகன், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் எம்.நரசிம்ஹலு உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.விதான் சவுதாவில் புத்தக மேளா, சர்வதேச திரைப்பட விழா துவக்க விழா நடக்க இருப்பதால், விழாக்கோலம் பூண்டுள்ளது.இந்த ஆண்டு 'வேற்றுமையில் உலகளாவிய அமைதி' எனும் கருப்பொருளில் திரைப்பட விழா நடக்கிறது. 60க்கு மேற்பட்ட நாடுகளின் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வரும் 2ம் தேதி முதல் 11 திரைகளில் திரையிடப்படுகின்றன.மார்ச் 3ல் உலக கன்னட சினிமா தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஓரியன் மாலில் உள்ள திரையரங்கில் விமரிசையாக விழா நடக்கிறது.ஓரியன் மால், கலா விதர சங்கம், டாக்டர் ராஜ்குமார் பவன், சுசித்ரா பிலிம் சொசைட்டி ஆகிய இடங்களில் திரைப்படங்கள் திரையிடப்படும்.
16-Feb-2025