மேலும் செய்திகள்
கர்நாடக அரசு பள்ளிகளில் கடலை மிட்டாய் நிறுத்தம்?
19-Feb-2025
பெங்களூரு: கோடை காலத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களில், பள்ளி மாணவ - மாணவியருக்கு மதிய உணவு வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் துவங்கவுள்ளன. தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்படும்.கோடை விடுமுறை நாட்களிலும், வறட்சி பாதித்த மாவட்டங்களில், மாணவ - மாணவியருக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்க கல்வித்துறை முன்வந்துள்ளது.கோடை விடுமுறை காலத்தில், 31 மாவட்டங்களின், 223 வறட்சி பாதிப்பு தாலுகாக்களில் ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மதிய உணவு வினியோகிக்க 73.93 கோடி ரூபாயை கல்வித்துறை ஒதுக்கியுள்ளது.மார்ச் 31ம் தேதிக்குள், மாவட்ட வாரியான மாணவர்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து, தன் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும்படி, பள்ளி கல்வித்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.இந்த அறிக்கை அடிப்படையில் நிதியுதவி நிர்ணயிக்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.
19-Feb-2025