மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண நிமான்ஸ் திட்டம்
பெங்களூரு: இன்றைய சூழ்நிலையில், மாணவர்களுக்கு மன அழுத்தம், நெருக்கடி அதிகரிக்கிறது. இதற்கு தீர்வு காண நிமான்ஸ் முடிவு செய்துள்ளது. மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக, நிமான்ஸ் இயக்குனர் பிரதிமா மூர்த்தி கூறியதாவது:இன்றைய சூழ்நிலையில், மாணவர்கள் மன அழுத்தம், நெருக்கடிக்கு ஆளாகின்றனர். மாணவர்களின் மன ரீதியான பிரச்னைகளை, ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டால், குணப்படுத்துவது மிகவும் எளிது. பிரச்னைகளை அடையாளம் கண்டு, அதை சரி செய்வது அவசியம். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மாணவர்கள், தாங்களாகவே ஆலோசனை பெற, டிஜிட்டல் மற்றும் ஆப்லைன் வசதி செய்யப்படுகிறது.மாணவர்களுக்கு ஏற்படும் மன ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, சமீபத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.கலை, அறிவியல், இன்ஜினியர், மருத்துவ துறைகளின் மாணவர்கள் தற்கொலை வாய்ப்புகள் அதிகம். மாணவர்களின் மன நலனை மேம்படுத்தி தற்கொலை எண்ணத்தை போக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.மாணவர்களின் மன ரீதியான பிரச்னைகளை சரி செய்ய, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நிமான்ஸ் ஒருங்கிணைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் துவங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.