உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் மீன் விலை கிடுகிடு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

பெங்களூரில் மீன் விலை கிடுகிடு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், பறவை காய்ச்சல் பரவியுள்ளது. ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன. நோய் பீதியால் கோழிகள் கொல்லப்படுகின்றன. அசைவ பிரியர்கள் ஆட்டு இறைச்சிக்கு மாறியுள்ளனர்.ஆட்டு இறைச்சி பிடிக்காதவர்கள், மீனை தேடி சாப்பிடுகின்றனர். மீன் தேவை அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள், தமிழகம், கேரளா உட்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து, பெங்களூருக்கு மீன்கள் வரும்.கோடை காலம் என்பதால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, கடலில் வெப்பம் இருப்பதால், மீன்கள் மேலே வருவது இல்லை. இதனால் கடலில் மீன்கள் கிடைப்பது இல்லை.டீசல் செலவுக்குக் கூட மீன்கள் கிடைப்பது இல்லை. துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான படகுகள் கரையில் நின்றுள்ளன. தேவைக்கு தகுந்தபடி வரத்து இல்லாததால், யஷ்வந்த்பூர், சிவாஜி நகரின் ரசல் மார்க்கெட், கே.ஆர்.மார்க்கெட், கே.ஆர்.புரம் என, பல பகுதிகளுக்கு மீன்கள் வருவது குறைந்துள்ளது.பெங்களூரில் மீன்கள் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை