உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் 400 ரவுடிகள் வீடுகளில் போலீசார் ரெய்டு

பெங்களூரில் 400 ரவுடிகள் வீடுகளில் போலீசார் ரெய்டு

பெங்களூரு: பெங்களூரில் இரண்டு நாட்களில் 400 ரவுடிகள் வீடுகளில் போலீசார் ரெய்டு நடத்தினர். வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரில், ரவுடிகள் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பு, கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. இதனால் ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தும்படி எட்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர்களுக்கு, கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டு இருந்தார்.கடந்த 7ம் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் இரவு வரை வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட மல்லேஸ்வரம், ராஜாஜிநகர். சுப்பிரமணியநகர், ராஜகோபால் நகர், பீன்யா, சோழதேவனஹள்ளி, கங்கமனக்குடி, ஜாலஹள்ளி, ஹெப்பால், ஆர்.டி.நகர் பகுதிகளில் வசிக்கும் 400 ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையின் போது அரிவாள், கம்பி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். குற்றச்சம்பவங்களில் ஈடுபட கூடாது என்று மற்ற ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை