வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Old is gold
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
47 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
58 minutes ago
பெங்களூரு : நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை, வெளுத்து கட்டுகிறது. இது பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியத்துக்கு நிம்மதி அளித்துள்ளது. விரைவில் திப்பகொண்டனஹள்ளி அணையில் இருந்து, நகருக்கு தண்ணீர் வினியோகிக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.பெங்களூருக்கும், ராம்நகர் பிடதியில் உள்ள திப்பகொண்டனஹள்ளி அணைக்கும் தொடர்பு உள்ளது. 2012ம் ஆண்டுக்கு முன்பு வரை, இதே அணையில் இருந்துதான், பெங்களூரு மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. காவிரி நான்காம் கட்ட பணிகள் முடிந்த பின், காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டது. இதனால் 2012ல் திப்பகொண்டன ஹள்ளி அணையில் இருந்து, குடிநீர் வினியோகம் முழுதுமாக நிறுத்தப்பட்டது. வாரியம் அலட்சியம்
அதன்பின் குடிநீர் வாரியத்தின் அலட்சியத்தால், அணை சீர் குலைந்தது. தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலந்ததால், அணையின் நீர் அசுத்தமடைந்தது. தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு தரமற்றதானது.பெங்களூரு, நாளுக்கு நாள் விரிவடைகிறது. மக்கள் தொகையும் அதிகரிக்கிறது. வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள், கல்வி, தொழில் என, பல காரணங்களால் பெங்களூரில் குடி பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு குடிநீர் வினியோகிப்பது, குடிநீர் வாரியத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. வருங்காலத்தில் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மாற்று வழி
காவிரியை மட்டும் நம்பியிருப்பது சரியல்ல. தொலை நோக்கு பார்வையுடன் திட்டம் வகுக்க வேண்டும். வருங்காலத்தில் மக்கள் தொகையை மனதில் கொண்டு, குடிநீருக்கு மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டும் என, வல்லுனர்கள் அறிவுறுத்தினர். இதை தீவிரமாக கருதிய குடிநீர் வாரியம், திப்பகொண்டனஹள்ளி அணையை சீரமைத்தது. தொழிற்சாலைகளின் கழிவு நீர், அணையில் கலப்பதை தடுக்க. நடவடிக்கை எடுத்தது. அணை அருகில் கழிவு நீர் சுத்திகரிப்பு யூனிட் அமைத்தது. பரிசோதிப்பு
பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு வரும் அனைத்து குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டன. அவசியமான இடங்களில், புதிதாக குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீர் பம்ப் செய்ய, புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீரின் தரத்தையும் பரிசோதிக்கின்றனர்.திப்பகொண்டனஹள்ளி அணையின் நீர் சேகரிப்பு திறன் 3.325 டி.எம்.சி.,யாகும். நடப்பாண்டு ஜூன் 1ல், திப்பகொண்டனஹள்ளி அணையில் 1.8 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் நீர்மட்டம் அதிகரித்து, 2.5 டி.எம்.சி., தண்ணீர் இருப்புள்ளது. தண்ணீர் தரம் குறித்து தெரிந்து கொள்ள தண்ணீர் சாம்பிளை, ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். அறிக்கை வந்த பின் பெங்களூரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு, 50 முதல் 60 எம்.எல்.டி., தண்ணீர் வினியோகிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Old is gold
47 minutes ago
58 minutes ago