மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
25 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
36 minutes ago
பெங்களூரு : பெங்களூரு நகர மாவட்டத்தில், மூன்று லோக்சபா தொகுதியில் உள்ளன. இதில், பெங்., வடக்கு - செயின்ட் ஜோசப் இண்டியன் பள்ளியிலும்; பெங்., தெற்கு - எஸ்.எஸ்.எம்.ஆர்.வி., - பி.யு., கல்லுாரியிலும்; பெங்., சென்ட்ரல் - மவுண்ட் கார்மல் பி.யு., கல்லுாரியிலும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.இதனால், நகரின் பல முக்கிய சாலைகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.விட்டல் மல்லையா சாலையின், சித்தலிங்கையா சதுக்கம் - ரிச்மென்ட் சதுக்கம்; ஆர்.ஆர்.எம்.ஆர்.சாலையின், ரிச்மென்ட் சதுக்கம் -ஹட்சன் சதுக்கம்; என்.ஆர்.சாலையின், ஹட்சன் சாலை - டவுன் ஹால் சதுக்கம்; கே.பி.சாலையின், எச்.எல்.டி., சதக்கம் - குயின்ஸ் சாலை சதுக்கம்; கே.ஜி.சாலையின், போலீஸ் கார்னர் சதுக்கம் - மைசூரு வங்கி சதுக்கம்.நிருபதுங்கா சாலையின், கே.ஆர்.சதுக்கம் - போலீஸ் கார்னர்; சென்ட்ரல் தெரு சாலையின், பி.ஆர்.வி., சதுக்கம் - அனில் கும்ப்லே சதுக்கம்; எம்.ஜி.சாலையின், அனில் கும்ப்ளே சதுக்கம் - குயின்ஸ் சாலை சதுக்கம் ஆகிய சாலைகளில், இன்று காலை 6:00 மணியில் இருந்து, ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.மேலும், ஜெயநகர் 18வது முக்கிய சாலை - 28வது முக்கிய சாலையின் இடையில் வரும் 36வது தெரு; 32வது தெரு -39வது தெரு சதுக்கம் இடையில் வரும் 26வது முக்கிய சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இது போன்று, மவுண்ட் கார்மல் கல்லுாரியை இணைக்கும், அரண்மனை சாலையின், வசந்த்நகர் சுரங்க பாலம் சதுக்கம் - நேரு கோளரங்கத்தின் கல்பனா சதுக்கம் வரையிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
25 minutes ago
36 minutes ago