ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையில் நாட்டின் நலனுக்காக 1,008 லட்சிய தீபம்
தொம்மலுார் : ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழாவையொட்டி, இன்று முப்பெரும் விழா நடக்கிறது.ஸ்ரீ வித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம், ஸ்ரீசாதுராம் சுவாமிகளின் 25ம் ஆண்டு ஆராதனை இரண்டாம் பாகம் விழா நடந்து வருகிறது. நேற்று காலையில், நான்கு வேதங்களின் ஐந்து பாகங்கள் வேத பாராயணம், உலக நன்மைக்காக நடந்தது.வேத பாராயணங்களை நன்கு கற்றவர்களை, தென்மாநிலங்களில் இருந்து அழைத்து வந்து, நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்த ராமவாத்தியார், அவரது மகன் மகேஷ் வாத்தியார் கவுரவிக்கப்பட்டனர். பின், மகேஷ் வாத்தியார் வேத பாராயணம் பாடினார்.மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை, பெண்கள், லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடந்தது. இதனை தொடர்ந்து நாடு, நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் நலனுக்காக 1,008 லட்சிய தீபம் ஏற்றப்பட்டது. இன்று சாஸ்தா பிரித்தி மஹோத்சவம், முப்பெரும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.