உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஓய்வு டி.ஜி.பி., கொலை வழக்கில் 1,150 பக்க குற்றப்பத்திரிகை

ஓய்வு டி.ஜி.பி., கொலை வழக்கில் 1,150 பக்க குற்றப்பத்திரிகை

பெங்களூரு: கர்நாடகாவில் டி.ஜி.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஓம்பிரகாஷ், 64. பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் மூன்று மாடி வீட்டில் மனைவி, மகள், மகன், மருமகனுடன் வசித்தார். கடந்த ஏப்ரல் 20ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக, ஓம்பிரகாஷை, கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற அவரது மனைவி பல்லவி கைது செய்யப்பட்டார். வழக்கு சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த கொலையில் ஓம்பிரகாஷ் மகள் கிருதிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஓம்பிரகாஷ் கொலை வழக்கில் பல்லவி மீது 1,150 பக்க குற்றப்பத்திரிகையை, பெங்களூரு கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சி.சி.பி., போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். கொலையில் கிருதிக்கு தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ