தங்கவயலில் 2 நாள் மின் தடை
தங்கவயல்: தங்கவயல், ராபர்ட்சன் பேட்டை சுவர்ணா நகர், விவேக் நகர், பாரண்டஹள்ளி பகுதிகளில் இன்றும், நாளை மறுநாளும் மின் தடை செய்யப்படுகிறது. தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் பெஸ்காம் ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவதால், இன்றும், நாளை மறுநாளும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும், சுவர்ணா நகர், விவேக் நகர், விவேக் நகர் எக்ஸ்டென்ஷன், பாரண்டஹள்ளி சாலை, பாரண்டஹள்ளி கிராமம் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு தருமாறு, பொதுமக்களிடம் தங்கவயல் பெஸ்காம் நிறுவனம் கோரியுள்ளது.