உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 24 மணி நேர ராம கோடி பஜனை

24 மணி நேர ராம கோடி பஜனை

தங்கவயல் : ஒரு கோடி முறை ராமரின் பெயரை உச்சரிக்கும் ராம கோடி பஜனையை தங்கவயல் நகராட்சி முன்னாள் தலைவர் தயானந்தா துவக்கி வைத்தார்.தங்கவயல் பொட்டேப்பள்ளி அருகேயுள்ள கம்பம்பள்ளி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஹனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அங்கு நிறுவப்பட்டுள்ள 30 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு பக்தர்கள் பூஜை செய்தனர்.ராம கோடி பஜனையை துவக்கி வைத்து தயானந்தா பேசுகையில், ''கிராமிய கலைஞர்களின் பக்தி பரவசத்துடன் நடக்கும் ராம கோடி பஜனை, இனி ஆண்டுதோறும் நடக்கும்,'' என்றார். நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கிய பஜனை இன்று காலை 8:00 மணி வரை 24 மணி நேரம் ராம பஜனை நடக்கிறது. இரு கோஷ்டியினர் கும்மி, ஆடல் பாடலுடன் பஜனையில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு மோர், பானகம் வழங்கினர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

சீதா ராமர் கல்யாணம்

ராபர்ட்சன்பேட்டை, கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில், சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை