உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் டெங்கு கட்டுப்படுத்த 240 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம்

பெங்களூரில் டெங்கு கட்டுப்படுத்த 240 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம்

பெங்களரூ: ''பெங்களூரில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 240 சுகாதார ஆய்வாளர்கள், 700 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்,'' என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறி உள்ளார்.பெங்களூரு சிக்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், கிரேட்டர் பெங்களூரு ஆணைய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வில் ஈடுபட்டார். அப்போது, குடியிருப்புவாசிகளிடம் மருந்துகள் வழங்கினார்.இதன்பின், நேற்று மாலை பெங்களூரு டவுன்ஹாலில் நடந்த தேசிய தின டெங்கு நிகழ்ச்சியில் அமைச்சர் தினேஷ் குண்டுராவ், சிக்பேட்டை தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., உதய் கருடாச்சார், கிரேட்டர் பெங்களூரு ஆணைய சிறப்பு சுகாதார ஆணையர் சுரால்கர் விகாஸ் கிஷோர், தலைமை சுகாதார அதிகாரி எஸ்.எஸ்.மதானி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில், அமைச்சர் பேசியதாவது:பெங்களூரில் 40 முதல் 50 சதவீதம் டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. பெங்களூரை, டெங்கு இல்லாத நகரமாக மாற்ற வேண்டும். இதற்கு மக்கள், தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். 'ஆய்வு செய்யுங்கள், சுத்தம் செய்யுங்கள், மூடி வையுங்கள்' என்ற பெயரில், சுகாதாரத்துறை, கிரேட்டர் பெங்களூரு ஆணையம் ஒருங்கிணைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' கொசு, தண்ணீரில் இனப்பெருக்கம் செய்கிறது. எனவே, குடியிருப்பு வாசிகள், தங்கள் அருகிலுள்ள இடங்களில், நீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும்.அப்போது தான், டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். பெங்களூரில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 240 சுகாதார ஆய்வாளர்கள், 700 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை