உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் நவம்பர் 18 - 20 வரை 28வது தொழில்நுட்ப மாநாடு

பெங்களூரில் நவம்பர் 18 - 20 வரை 28வது தொழில்நுட்ப மாநாடு

பெங்களூரு : ''பெங்களூரில் 28வது தொழில்நுட்ப உச்சி மாநாடு, நவம்பர் 18 - 20 வரை நடக்க உள்ளது,'' என, முதல்வர் சித்தராமையா அறிவித்தார். தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில், கர்நாடக அரசு சார்பில், 27 ஆண்டுகளாக, தொழில்நுட்ப உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகின் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. புதிய தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு உருவாக்குவதல் உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதித்து, தீர்வு காணப்படுகின்றன. அந்த வகையில், 100க்கும் அதிகமான முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன், முதல்வர் சித்தராமையா நேற்று, பெங்களூரு தனியார் ஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டபடி, ஆலோசனை நடத்தினார். இதில், அவர் பேசியதாவது: தொழில்நுட்ப உச்சி மாநாடு, கர்நாடகாவை, இந்தியாவின் மிகவும் வணிக நட்பு மாநிலங்களில் ஒன்றாக மாற்றும். வளமான கலாச்சாரத்துக்கும், தொழில்நுட்ப உருவாக்கத்திலும் கர்நாடகா பெயர் பெற்றது. கர்நாடகா, நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி மாநிலமாகும். இது நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் 44 சதவீதம் ஆகும். கர்நாடகாவில், 18,300க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்களும், 45க்கும் மேற்பட்ட யூனிகான் நிறுவனங்களும் உள்ளன. பெரிய அளவில் தொழில் துவங்குவதற்கும், வளருவதற்கும் கர்நாடகா சிறந்த இடம் என்பதை இது நிரூபிக்கிறது. செய ற்கை நுண்ணறிவில், பெங்களூரு, உலகின் சிறந்த நகரங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது நாட்டில் 50 சதவீதத்தை கொண்டுள்ளது. இதனால், உலகளவில் இரண்டா வது பெரிய திறன் மையமாக விளங்குகிறது. இந்த ஆண்டு, பெங்களூரில் 28வது தொழில்நுட்ப உச்சி மாநாடு, வரும் நவம்பர் 18 - 20 வரை நடக்க உள்ளது. பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தொழில் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். இவ்வாறு அவர் பேசினார். துணை முதல்வர் சிவகுமார், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை