உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஓய்வு ஏ.சி.பி.,யை தாக்கி நகை கொள்ளையடித்த 3 பேர் கைது

ஓய்வு ஏ.சி.பி.,யை தாக்கி நகை கொள்ளையடித்த 3 பேர் கைது

சஞ்சய்நகர்: நடைப்பயிற்சி சென்ற ஓய்வு ஏ.சி.பி.,யை கத்தியால் குத்தி, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த, மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு, சஞ்சய்நகரில் வசிப்பவர் சுப்பண்ணா. உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 8ம் தேதி காலை 6:00 மணிக்கு ஹெப்பால் கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை பகுதியில், நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள், சுப்பண்ணாவை சுற்றி வளைத்தனர். கத்தியை காண்பித்து மிரட்டி, சுப்பண்ணா கழுத்தில் அணிந்த இரண்டு செயின்களை பறித்தனர். மூன்று பேரையும் சுப்பண்ணா பிடிக்க முயன்றபோது, கத்தியால் அவரை கையில் தாக்கிவிட்டு கைசெயின், மோதிரங்கள் உட்பட எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பினர். சுப்பண்ணா அளித்த புகாரை அடுத்து, சஞ்சய்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், டி.ஜே.ஹள்ளியின் சையத் மொஹ்சின், 30, முகமது சல்மான், 20, சையது இர்பான், 23 ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ganesun Iyer
செப் 14, 2025 08:12

வயசானவர் வாக்கிங் போகும் போது எதுக்கு இவ்வளவு நகை.. அதுவும் ஆண்.. தவறி விழுந்தாலோ, மயங்கி விழுந்தாலோ கூட நஷ்டம் தான்..


நிக்கோல்தாம்சன்
செப் 14, 2025 06:22

எனது விவசாய நண்பர் சஞ்சீவி வசிக்கும் பகுதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை