மேலும் செய்திகள்
மதுக்கடைக்கு எதிராக கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
17-Jul-2025
சோழதேவனஹள்ளி: மதுக்கடை முன்பு ஏற்பட்ட தகராறில், டிராகரால் குத்தி ரவுடியை கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு, சிக்கபானவாராவில் வசித்தவர் பிரதாப், 27. ரவுடி. இவர் மீது சிக்கபானவாரா, சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் சிக்கபானவாராவில் உள்ள, மதுக்கடை முன் பிரதாப் நின்றார். அப்போது பைக்கில் மூன்று பேர், மதுக்கடைக்கு வந்தனர். அவர்களை பார்த்து, 'மதுக்கடை மூடப்பட்டுள்ளது. 'நீங்கள் போய் விடுங்கள்' என, பிரதாப் கூறினார். கோபம் அடைந்த மூன்று பேரும், 'எங்களை போக சொல்ல நீ யார்?' என்று கேட்டு, பிரதாப்பிடம் தகராறு செய்தனர். அந்த வழியாக சென்றவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து தன் பைக்கில் பிரதாப் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பைக்கை பின்தொடர்ந்து சென்ற மூவரும், தங்கள் கையில் இருந்த டிராகர் எனும் கூர்மையான ஆயுதத்தை கையில் மாட்டிக் கொண்டு பிரதாப் முதுகில் குத்தினர். பைக்கில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடினார். ஆனாலும் மனம் இறங்காத மூன்று பேரும், பிரதாப்பை மீண்டும் டிராகரால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். முதுகு, வயிற்றில் பலத்த காயம் அடைந்த பிரதாப், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, பிரதாப்பை கொலை செய்த கெப்பேபாளையாவின் அக் ஷய், 27, தேஜாஸ், 25, லிகித், 24 ஆகியோரை, சோழதேவனஹள்ளி போலீசார் நேற்று கைது செய்தனர்.
17-Jul-2025