வியாபாரிக்கு மிரட்டல் 3 பேர் கைது
உத்தரகன்னடா: மகளின் ஆபாச போட்டோ வெளியிடு வதாக கூறி, பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டிய மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். உத்தரகன்னடா, பட்கல் தாலுகாவின், சஹரா கிராமத்தில் வசிப்பவர் வித்யாதி அன்வர் பாஷா, 57. இவர் காய்கறி வியாபாரி. ஆகஸ்ட் 16ம் தேதி, வித்யாதி அன்வர் பாஷாவுக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர், 'உங்கள் மகளின் தனிப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் என்னிடம் உள்ளன. எனக்கு 20 லட்சம் ரூபாய் கொடுக்காவிட்டால, அனைவருக்கும் அனுப்பி, உங்களின் மானத்தை வாங்குவேன்' என மிரட்டினார். ஆகஸ்ட் 18ம் தேதி, 19ம் தேதியும் அவரது மனைவியை மொபைல் போனில் தொடர்பு கொண்ட அந்நபர், மீண்டும் மிரட்டினார். சஹரா போலீசார் விசாரணை நடத்தி, முகமது பாரிஸ், 20, அர்ஷத், 22, அமன், 20, ஆகியோரை கைது செய்தனர்.