உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விவசாயிகளுக்கு 3 நாள் இலவச பயிற்சி

விவசாயிகளுக்கு 3 நாள் இலவச பயிற்சி

பெங்களூரு : தேனீ, பட்டு கூடு, காளான் வளர்ப்பது விவசாயத்தின் ஒரு பகுதியாக இப்போது மாறிவிட்டது. இளம் தலைமுறை விவசாயிகள் தேனீ, பட்டுக்கூடு, காளான் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், பல ஆண்டுகளாக நெல், சோளம், காய்கறிகளை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, தேனீ, பட்டுக்கூடு, காளான் வளர்ப்பு பற்றி சரியான தெளிவு இல்லை. இதனால், கர்நாடக விவசாய துறை சார்பில், பெங்களூரு ஆனேக்கல்லில் உள்ள விவசாய பயிற்சி மையத்தில், இன்று முதல் மூன்று நாட்கள் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி துணை பயிர்கள் பயிரிடுவது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 63636 95621 என்ற மொபைல் நம்பரை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி