உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் 3 பேர் பலி

பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் 3 பேர் பலி

நெலமங்களா: பஞ்சராகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில், லாரி டிரைவர்கள் இருவர், கிளீனர் என மூன்று பேர் உடல்நசுங்கி பலியாகினர். பெங்களூரு ரூரல் தாபஸ்பேட் குண்டேஹள்ளி கிராம பகுதியில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஒரு லாரி சென்றது. லாரியின் பின்பக்க டயர் பஞ்சர் ஆனது. இதனால் லாரியில் இருந்து இறங்கிய 3 பேர், பஞ்சர் ஆன டயரை கழற்றிவிட்டு, வேறு டயரை மாட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் பஸ், லாரிக்கு இடையே சிக்கி மூன்று பேரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும், நெலமங்களா போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த பஸ் பயணியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரேன் மூலம், லாரிக்குள் சிக்கிய பஸ் வெளியே எடுக்கப்பட்டது. உடல்நசுங்கி இறந்த மூன்று பேரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. போலீஸ் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள், பாகல்கோட் முதோலை சேர்ந்த லாரி டிரைவர்கள் சீனப்பா, 50, நசீர் அகமது, 36, கிளீனர் ஆனந்த், 42, என்பது தெரிந்தது. முதோலில் இருந்து பெங்களூருக்கு லாரியில் செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. பஸ்சை ஓட்டிய டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததால், விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை