உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் பலி

ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் பலி

ஹாசன் : வேகமாக வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா தாலுகாவின், ஹேமாவதி லே - அவுட்டில் வசித்தவர் தருண், 26, ரேவந்த், 26. காந்தி நகர் லே - அவுட்டில் வசித்தவர் இர்பான், 25. நண்பர்களான இவர்கள், ஒரே பைக்கில் மைசூருக்கு சென்றிருந்தனர். நேற்று அதிகாலை, மைசூரில் இருந்து ஹாசனுக்கு வந்து கொண்டிருந்தனர். ஹொளேநரசிபுராவின், யடகேனஹள்ளி கிராமம் அருகில் செல்லும் போது, எதிரே வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மோதியது. பலத்த காயமடைந்த இர்பான், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ரேவந்த் மற்றும் தருண், ஹொளேநரசிபுரா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த ஹள்ளி மைசூரு போலீசார், உடல்களை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி