உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  36 ஜீன்ஸ் பேன்ட் தொழிற்சாலைக்கு சீல்

 36 ஜீன்ஸ் பேன்ட் தொழிற்சாலைக்கு சீல்

பல்லாரி: பல்லாரி மாவட்டத்தில் ஜீன்ஸ் பேன்ட் தயாரிப்பு, பிரதான தொழிலாக உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 2023 தேர்தல் நேரத்தில் ராகுல் பிரசாரம் செய்தபோது, 'பல்லாரியில் ஜீன்ஸ் பூங்கா அமைக்கப்படும்' என்று அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன. இந்நிலையில், அசுத்த நீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்றாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக, பல்லாரியில் 36 ஜீன்ஸ் பேன்ட் தொழிற்சாலைகளுக்கு, கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று 'சீல்' வைத்தது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான நேரடி, மறைமுக தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்