உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.2 கோடி கொள்ளை வழக்கில் 4 பேர் கைது

ரூ.2 கோடி கொள்ளை வழக்கில் 4 பேர் கைது

வித்யாரண்யபுரா: டாலராக மாற்ற எடுத்துச் சென்றபோது, இரண்டு கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு, கெங்கேரியில் வசிப்பவர் ஸ்ரீஹர்ஷா. தொழில் அதிபர். எண்ணெய் நிறுவனம் அமைக்க முடிவு செய்தார்.இதற்காக ஜெர்மனியில் இருந்து இயந்திரம் வாங்குவதற்கு, 2 கோடி ரூபாய் வைத்திருந்தார்.பணத்தை டாலராக மாற்ற, கடந்த மாதம் 25ம் தேதி வித்யாரண்யபுராவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தபோது, நிறுவனத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், கத்திமுனையில் ஸ்ரீஹர்ஷாவை மிரட்டி 2 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.இதுகுறித்து அவர் அளித்த புகாரில் வித்யாரண்யபுரா போலீசார் விசாரித்தனர்.இந்த வழக்கில் தனியார் நிறுவன உரிமையாளர் பெஞ்சமின், அவரது நண்பர்கள் பிரகாஷ், பரத், ஸ்ரீஹர்ஷாவின் நண்பர் ரக் ஷித் ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டனர். பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டிக் கொடுத்ததே ரக் ஷித் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 1.60 கோடி ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி