உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிக்கமகளூரு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணியருக்கு 4 நாள் தடை

 சிக்கமகளூரு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணியருக்கு 4 நாள் தடை

சிக்கமகளூரு: முல்லைய்யன கிரி, சீதாளய்யன கிரி, பாபாபுடன் கிரி, காளிகெரே, மாணிக்யதாரா ஆகிய சுற்றுலாத் தலங்களில், டிசம்பர் 1 முதல் நான்கு நாட்கள், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: குரு தத்தாத்ரேய ஜெயந்தியை முன்னிட்டு, சிக்கமகளூரின் தத்தாத்ரேய பாபாபுடன் தர்காவில், டிசம்பர் 2ம் தேதி முதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மாலை அணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபாபுடன் மலைக்கு வருவர்; பாதயாத்திரையாகவும் வருவர். இந்த நேரத்தில் பொது மக்களின் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் இயங்கினால், போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும். எனவே பாபாபுடன் மலை, சீதாளய்யன கிரி, முல்லைய்யன கிரி, ஹொன்னம்மனஹள்ளா, ஜரி நீர்வீழ்ச்சி, மாணிக்யதாரா நீர்வீழ்ச்சி, காளிகெரே ஆகிய சுற்றுலா தலங்களில், டிசம்பர் 1ம் தேதி, காலை 6:00 மணி முதல், டிசம்பர் 5ம் தேதி காலை 10:00 மணி வரை, சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ