உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

மங்களூரு:கர்நாடகாவில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை: மங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த அனுபம் அகர்வால், பொருளாதார குற்றப்பிரிவு, குற்ற விசாரணை பிரிவு டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார் பொருளாதார குற்றப்பிரிவு, குற்ற விசாரணை பிரிவு டி.ஐ.ஜி., புராசே புஷன் குலபுரா, பெலகாவி போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார் உளவுத்துறை டி.ஐ.ஜி., சுதிர்குமார் ரெட்டி, மங்களூரு போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார் உளவுத்துறை எஸ்.பி., ஹரிராம் சங்கர், உடுப்பி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !