தடுப்பு சுவரில் கார் மோதல் தம்பதி உட்பட 4 பேர் பலி
தாபஸ்பேட்: தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில், தம்பதி - மகள் உட்பட 4 பேர் இறந்தனர்.பெங்களூரு மல்லேஸ்வரத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி சசிகலா. தம்பதியின் மகள் தீபிகா, 35. இவருக்கு திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகள் உள்ளனர். துமகூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, நேற்று காலை மல்லேஸ்வரத்தில் இருந்து தம்பதி, மகள், இரண்டு குழந்தைகள் காரில் புறப்பட்டனர்.காரை டிரைவர் கோபால், 45 ஓட்டினார். பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே தாபஸ்பேட் பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலை தடுப்பு சுவரில் மோதியது. தம்பதி, மகள், டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த இரு குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.