உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரவுடி சிவகுமார் கொலை வழக்கு எம்.எல்.ஏ.,விடம் 40 கேள்விகள்

ரவுடி சிவகுமார் கொலை வழக்கு எம்.எல்.ஏ.,விடம் 40 கேள்விகள்

பாரதிநகர்: ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.பெங்களூரு பாரதிநகரை சேர்ந்த ரவுடி சிவகுமார், 44, கடந்த 15ம் தேதி இரவு ஹலசூரு ஏரிக்கரை பகுதியில், படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் உட்பட சிலர் மீது வழக்குப்பதிவானது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.வழக்கின் முதல் குற்றவாளியும், பைரதி பசவராஜின் நெருங்கிய ஆதரவாளருமான ஜெகதீஷ் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீசார் தேடுகின்றனர். இதற்கிடையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பைரதி பசவராஜுக்கு, போலீசார் சம்மன் கொடுத்தனர்.நேற்று மதியம் 2:30 மணிக்கு, பாரதிநகர் போலீஸ் நிலையத்திற்கு வந்த பைரதி பசவராஜ், விசாரணை அதிகாரியான கே.ஜி.ஹள்ளி ஏ.சி.பி., பிரகாஷ் ராத்தோட் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்.'ஜெகதீசுக்கும், உங்களுக்கும் எப்படி தொடர்பு; உங்களுக்கும், கொலையான சிவகுமாருக்கும் என்ன தொடர்பு; சிவகுமாருக்கும், உங்கள் ஆதரவாளர்களுக்கும் இடையில் என்ன பிரச்னை இருந்தது என்று தெரியுமா; நீங்கள் கூறியதால் தான் கொலை நடந்ததாக கூறப்படுகிறதே; ஏற்கனவே உங்கள் மீது சிவகுமார் போலீசில் புகார் செய்து உள்ளாரே; ஜெகதீஷ் பெயர் ரவுடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதில், உங்கள் பங்கு உள்ளதா?' என்பது உட்பட 40 கேள்விகளை, பைரதி பசவராஜிடம், பிரகாஷ் ராத்தோட் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.இதற்கு எம்.எல்.ஏ., பதில் அளித்தார். மூன்று மணி நேரம் விசாரணைக்கு பின், மாலை 5:30 மணிக்கு வெளியே வந்தார். வரும் 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ