உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கிறிஸ்துவர் பிரிவில் 47 துணை ஜாதிகள் அரசு மீது கவர்னரிடம் பா.ஜ., புகார்; லிங்காயத் தலைவர்கள் ஆலோசனை

கிறிஸ்துவர் பிரிவில் 47 துணை ஜாதிகள் அரசு மீது கவர்னரிடம் பா.ஜ., புகார்; லிங்காயத் தலைவர்கள் ஆலோசனை

பெங்களூரில் தனியார் ஹோட்டலில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ.,வை சேர்ந்த லிங்காயத் சமூக தலைவர்கள் நேற்று திடீரென ஆலோசனை நடத்தினர். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எடியூரப்பா தலைமை தாங்கிய கூட்டத்தில், மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்தும், இந்த கணக்கெடுப்பால் லிங்காயத் சமூகத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பின், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பின் பின்னணியில் காங்கிரஸ் அரசின் சதி, தந்திரம் உள்ளது. கிறிஸ்துவ பிரிவின் கீழ் புதிதாக 47 துணை ஜாதிகளை உருவாக்கி உள்ளனர். இது சட்டவிரோதமானது. ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மூலம், மீண்டும் ஒரு முறை லிங்காயத் சமூகத்தை பிரிக்கும் முயற்சியில் சித்தராமையா ஈடுபடுகிறார். இதற்கு முன்பு வீரசைவ லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவித்து பிளவுபடுத்த முயன்றார். லிங்காயத் சமூகத்தில் உள்ள குழப்பங்களை சரிசெய்யவும், சமூகத்தை ஒருங்கிணைப்பது பற்றியும் விவாதித்துள்ளோம். மடாதிபதிகளுடன் விரைவில் விவாதிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை