உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கோலார் டி.சி.சி., வங்கியில் 500 கோப்புகள் மாயம்

 கோலார் டி.சி.சி., வங்கியில் 500 கோப்புகள் மாயம்

கோலார்: கோலார் மாவட்ட டி.சி.சி., வங்கியில் கடன் வழங்கியது தொடர்பான 500 கோப்புகள் மாயமாகி உள்ளதாக கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் தெரிவித்தார். கோலார் மாவட்ட டி.சி.சி., வங்கி, மாவட்ட உழைக்கும் பத்திரிகையாளர்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கம், கூட்டுறவு துறை ஆகியவை கோலார் பத்திரிகையாளர் சங்க மண்டபத்தில், 72வது அகில இந்திய கூட்டுறவு வாரம் நிறைவு விழாவை நேற்று நடத்தின. கொத்துார் மஞ்சுநாத் பேசியதாவது: விவசாயிகள், ஏழைப்பெண்கள் பெயரில், பணத்தை விழுங்கியவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள். ஒரு இயக்குனராக இருந்து வங்கியை சீர்படுத்த முயற்சிப்பேன். வங்கிக்கு, அரசு 10 கோடி ரூபாய் கொடுத்திருந்தது. கடன் கொடுத்த விபரம் அடங்கிய, 500 கோப்புகள் பற்றி கேட்டபோது, காணவில்லை; வங்கி ஊழியர் விடுப்பில் சென்றுவிட்டதாக கூறினர். இன்னும் கோப்புகள் இருக்கும் இடம் தெரியவில்லை. என் பதவிக் காலத்தில் கோலார் சட்டசபை தொகுதி மேம்பாட்டுக்காக 1,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 1,000 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்து வருகின்றன. வேம்கல், நரசாப்பூர் திட்டமிடல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தங்கள் கிராமங்களை விட்டு விவசாயிகள் வெளியேறாமல் இருக்க 60 சதவீதம் பசுமை மண்டலமாகவும், 40 சதவீதம் மஞ்சள் மண்டலமாகவும் மாற்ற முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பத்திரிகையாளர் பல்நோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் கே.எஸ்.கணேஷ் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்