உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரயில் நிலையத்தில் 51 சிறுவர் - சிறுமியர் மீட்பு

ரயில் நிலையத்தில் 51 சிறுவர் - சிறுமியர் மீட்பு

பெங்களூரு: கர்நாடகாவின் ரயில் நிலையங்களில் கடந்த மாதத்தில் மட்டும் 51 சிறுவர், சிறுமியரை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டதாக தென் மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தென் மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவின் பல ரயில் நிலையங்களில் இருந்து கடந்த மாதத்தில் மட்டும் 51 சிறுவர், சிறுமியரை ரயில்வே போலீசார் பாதுகாப்பாக மீட்டு உள்ளனர். இவர்களில், 12 சிறுமியர், 39 சிறுவர்கள் அடங்குவர். பெற்றோருடன் ரயில் நிலையத்திற்கு வந்து தொலைந்தவர்கள், வீட்டிலிருந்து சண்டை போட்டுவிட்டு வெளியேறியவர்கள் என, 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்த 46 பேர் கைது செய்யப்பட்டனர். ரயில்வே நிலையத்திற்குள் மது பாட்டில்கள் எடுத்து வந்தது தொடர்பாக ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 86,000 ரூபாய் மதிப்புள்ள 168 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டர். ரயில்வே சொத்துக்களை திருடியது தொடர்பாக ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.66 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. பயணியர் தொலைத்துவிட்டுச் சென்ற லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட 17.33 லட்சம் ரூபாய் பொருட்கள் மீட்கப்பட்டு, பயணியரிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை