உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஒரே நேரத்தில் 2 கைகளிலும் எழுதும் 7 வயது சிறுமி

 ஒரே நேரத்தில் 2 கைகளிலும் எழுதும் 7 வயது சிறுமி

- நமது நிருபர் - மைசூரின் தேவராஜா மொஹல்லாவில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன். இவரது 7 வயது மகள் சிரஸ்வி. ஒரே நேரத்தில் இரு கைகளிலும் எழுதும் திறமைசாலியாக விளங்குகிறார். இந்த திறமைக்காக 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்'சிலும் இடம்பிடித்து உள்ளார். சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த கலாம்ஸ் உலக சாதனை பட்டியல் போட்டியில், ஒரே நேரத்தில் இரண்டு கை களிலும் 100 ஆங்கில வார்த்தையை 14 நிமிடங்கள் 15 வினாடிகளில் எழுதி சாதனை படைத்தார். ஆங்கிலம் மட்டுமின்றி கன்னட எழுத்துகளையும் ஒரே நேரத்தில் இரு கைகளிலும் எழுதும் அசாத்திய திறமையும் இவருக்கு உள்ளது. எழுத்துகள் மட்டுமின்றி எண் வரிசையும் எழுதுகிறார். ஒன்று முதல் ஐம்பது வரையிலான எண்களை ஒரு கையில் நேராகவும், இன்னொரு கையில் தலை கீழாகவும் எழுதும் திறமையும் இருவருக்கு உள்ளது. தற்போது ஒரு கையில் கன்னடத்தையும், இன்னொரு கையில் ஆங்கிலத்தையும் எழுத கற்று வருகிறார். தனது திறமையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கவும் பிற பள்ளிகளுக்கு சென்று, ஒரே நேரத்தில் இரு கையிலும் எழுதுவது எப்படி என்று கூறுகிறார். எழுதுவது மட்டுமின்றி பரதநாட்டியம், கர்நாடக சங்கீதத்திலும் கைதேர்ந்தவராக உள்ளார். இவரது திறமையை அங்கீகரிக்கும் வகையில், தென் இந்திய பெண்கள் சாதனையாளர் விருது - 2025 க்கும் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இரு கைகளையும் பயன்படுத்தும் திறன், பெண்களை விட ஆண் களிடம் அதிகம் காணப்படும் அரிய திறமையாக உள்ளது. உலகளவில் மக்கள் தொகையில் இரு கைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி எழுதுவோர் 1 சதவீதம் என்பதும், இதில் சிரஸ்வி இருப்பதும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை