வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து 8 பேர் காயம்
விஜயநகரா: காஸ் சிலிண்டர் வெடித்ததில் எட்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். விஜயநகரா ஹொஸ்பேட் தா லுகா காடிகனுார் கிராமத்தில் வசிப்பவர் ஹாலப்பா, 42; வக்கீல். இவர் மனைவி கவிதா, 32. இவரது வீட்டில் மயிலாரப்பா, 48, மல்லம்மா, 40, கங்கம்மா, 63, காவிரி, 18, காவியா, 15, நிகில், 13, ஆகிய எட்டு பேர் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். நேற் று அதிகாலை 5:15 மணிக்கு, டீ போடுவதற்காக காஸ் அடுப்பை கவிதா பற்ற வைக்க முற்பட்டார். அப்போது, பெரிய சத்தத்துடன் காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில், வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீஸ், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் வர நேரமானதால், அவர்களே வீட்டில் இருந்த எட்டு பேரையும் மீட்டு, சந்துார் தாலுகாவில் உள்ள தோரணகல்லு சஞ்சீவினி மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயமடைந்த எட்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், கவிதாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார், தீயணப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். ஹொஸ்பேட் போலீசார், 'கசிவு ஏற்பட்டு காஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம். இரவு துாங்க செல்லும் முன் சிலிண்டரை 'ஆப்' செய்யாததால் விபத்து நிகழ்ந்திருக்கலாம்' என்றனர்.