உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பணி நேரத்தில் மது விருந்து 9 அதிகாரிகள் சஸ்பெண்ட்

 பணி நேரத்தில் மது விருந்து 9 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெங்களூரு: பணி நேரத்தில் மது விருந்து நடத்திய, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள், ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூரு ரூரல் சிவகங்கே அருகே சித்தார பெட்டா மலை அடிவாரத்தில், கடந்த 24ம் தேதி ஒரு கும்பல் மது விருந்து நடத்திய, வீடியோக்கள் வேகமாக பரவின. மது விருந்து நடத்தியவர்கள் கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் அதிகாரிகள் என்று தகவல் வெளியானது. வீடியோவில் இருப்பது, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் என்றால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, கிராம வளர்ச்சி அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே உத்தரவிட்டார். இதன்படி, நடத்தப்பட்ட விசாரணையில் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் கிரிஷ், ஹரிஷ், பிரசாந்த், சிரஞ்சீவி, ரவிசங்கர், தினேஷ், கிராம பஞ்சாயத்து செயலர்கள் கெம்ப ரங்கய்யா. மற்றும் கங்காதர், இரண்டாம் நிலை கணக்கு உதவியாளர் மஞ்சுநாத் ஆகியோர், பணி நேரத்தில் வேலைக்கு செல்லாமல், மது விருந்து நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள், ஒன்பது பேரையும் சஸ்பெண்ட் செய்து, பெங்களூரு ரூரல் மாவட்ட பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி வாசந்தி அமர் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை