தம்பி சுட்டதில் 9 வயது அண்ணன் பலி
கார்வார்: விளையாடியபோது, ஏழு வயது தம்பி துப்பாக்கியால் விளையாட்டாக சுட்டதில், ஒன்பது வயது அண்ணன் உயிரிழந்தான். உத்தர கன்னடாவின் சிர்சி தாலுகா சோமனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா உண்டியார். இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் கரியப்பா, 9. இரண்டாவது மகனுக்கு ஏழு வயது ஆகிறது. சோமனஹள்ளி கிராமத்தில் உள்ள பாக்கு தோட்டத்தில் பசப்பா, பவித்ரா தம்பதி வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் அந்த தோட்டத்திற்கு கரியப்பாவும், அவரது தம்பியும் சென்று விளையாடினர். தோட்டத்தின் பாதுகாவலர் நிதிஷ் கவுடா என்பவர் வைத்திருந்த, சிறிய ரக நாட்டு துப்பாக்கியை எடுத்து, கரியப்பாவின் சிறுவர்கள் விளையாடினர். எதிர்பாராதவிதமாக தம்பி துப்பாக்கியின் விசையை அழுத்தியதில், கரியப்பா உடலில் குண்டு துளைத்தது. சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். பசப்பா உண்டியார் அளித்த புகாரில் தோட்ட பாதுகாவலர் நிதிஷ் கவுடா, உரிமையாளர் ராகவ் ஹெக்டே மீது கொலை வழக்குப் பதிவாகி உள்ளது.