மேலும் செய்திகள்
மேம்பாலப்பணி காரணமாக போக்குவரத்து நெரிசல்
09-Jun-2025
* பிரச்சனையும், தீர்வும் . . .
24-May-2025
பெங்களூரு: பெங்களூரின் பென்னிகானஹள்ளியில் இருந்து கஸ்துாரிநகர் வரை, மேம்பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால், பென்னிகானஹள்ளி - ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் 90 நாட்களுக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு கிழக்கு பிரிவு போக்குவரத்து டி.சி.பி., சாகில் பாகா வெளியிட்ட அறிக்கை:பெங்களூரின் பென்னிகானஹள்ளியில் இருந்து கஸ்துாரிநகர் வரை, மேம்பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அந்த மார்க்கத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.போக்குவரத்து சுமூகமாக இருப்பதற்காக, பென்னிகானஹள்ளி கோகோ கோலா குடோன் சாலை முதல் கஸ்துாரிநகரில் உள்ள ஓல்டு மெட்ராஸ் சாலை வரை, ஜூன் 14ம் தேதி முதல் 90 நாட்களுக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.பென்னிகானஹள்ளியில் இருந்து கஸ்துாரிநகர் செல்ல நினைக்கும் வாகன ஓட்டிகள், ஹெப்பால் வெளிவட்ட சாலை வழியாக கஸ்துாரிநகர் செல்லலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
09-Jun-2025
24-May-2025