உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஏசி மின்சார பஸ்கள்: பி.எம்.டி.சி., திட்டம்

ஏசி மின்சார பஸ்கள்: பி.எம்.டி.சி., திட்டம்

பெங்களூரு: பெங்களூரில் முதன் முறையாக, குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பஸ்களை இயக்க, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.கோடை வெப்பம் மக்களை வறுத்து எடுக்கிறது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க, 'ஏசி' வசதி உள்ள வாகனங்கள், மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணம் செய்கின்றனர். பி.எம்.டி.சி., பஸ்களில் பயணியர் எண்ணிக்கை குறைகிறது.இதை கருத்தில் கொண்டு, குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பஸ்களை இயக்க பி.எம்.டி.சி., திட்டமிடுகிறது.இதுகுறித்து, பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதில் இருந்து தப்பிக்க, மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர். இதற்கு முன்பு தினமும் 8 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 9 லட்சமாக அதிகரித்துள்ளது.மற்றொரு பக்கம், பி.எம்.டி.சி., பஸ்களில் பயணியர் எண்ணிக்கை குறைகிறது. பயணியரின் நலனுக்காகவும், பஸ்களில் பயணியர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும், குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பஸ்களை இயக்க, பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது.பெங்களூரில் 320 புதிய 'ஏசி' எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சில பஸ்கள் சோதனை முறையில் இயக்கப்பட்டன. இவை வெற்றி அடைந்துள்ளன.முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, அனைத்து பஸ்களின் போக்குவரத்தை துவக்கி வைப்பர். அசோக் லேலண்ட் நிறுவனத்திடம், பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டுள்ளன.கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் மெஜஸ்டிக், கத்ரிகுப்பே, ஐ.டி.பி.எல்., ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் பகுதிகளுக்கு ஏசி எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும். தற்போது கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு இயக்கப்படும் வாயு வஜ்ரா பஸ்களின் போக்குவரத்தை நிறுத்தி, புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பஸ்களை இயக்க ஆலோசிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை