உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை ஆடிப்பூர சீமந்தோத்சவம்

காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை ஆடிப்பூர சீமந்தோத்சவம்

சிவாஜிநகர்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி நாளை சீமந்தோத்சவம் நடக்கிறது. பெங்களூரு சிவாஜிநகர் திம்மையா சாலையில், காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி நாளை காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை சீமந்தோத்சவம் நடக்கிறது. விசாலாட்சி அம்மன் மடியில் வளையல், மஞ்சள், குங்குமம், முளை கட்டிய பயறு வைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜை முடிந்த பின், அம்மன் மடியில் வைக்கப்பட்ட வளையல், மஞ்சள், குங்குமம், முளை கட்டிய பயறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்த பயறை சாப்பிட்டதால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்று ஐதீகம். பக்தர்கள் அனைவரும் சீமந்தோத்சவத்தில் கலந்து கொண்டு, அம்மனின் ஆசிர்வாதத்தை பெறுமாறு, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை