உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 30 நிமிடங்களில் 11 கேழ்வரகு களி உருண்டை சாப்பிட்டு அசத்தல்

30 நிமிடங்களில் 11 கேழ்வரகு களி உருண்டை சாப்பிட்டு அசத்தல்

சாம்ராஜ்நகர்: கேழ்வரகு களி சாப்பிடும் போட்டியில், அரைமணி நேரத்தில் 11 களி உருண்டை சாப்பிட்டு, 55 வயது நபர் வெற்றி பெற்றார்.சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகாலின் பாளையா கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு கேழ்வரகு களி சாப்பிடும் போட்டி நடந்தது. இதில், ஆண்கள் பிரிவில் 18 பேர் பங்கேற்றனர். போட்டி நேரம் அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது.போட்டி துவங்கியது முதல் முடியும் வரை, போட்டியாளர்களை, கிராம மக்கள் உற்சாகப்படுத்தி வந்தனர். ஆண்கள் பிரிவில் இதே கிராமத்தை சேர்ந்த குன்னநாயகா, 11 களி உருண்டை சாப்பிட்டார். இவருக்கு முதல் பரிசாக 5,000 ரூபாயும், ஒரு செட் பேன்ட், சட்டை வழங்கப்பட்டது.இரண்டாவது இடம் பிடித்த நாகமல்லா நாயகா, ஒன்பது களி உருண்டை சாப்பிட்டார். இவருக்கு 2,500 ரூபாய் ரொக்கமும், ஒரு செட் ஆடையும் வழங்கப்பட்டது.முதலிடம் பிடித்த குன்ன நாயகாவை, அவரது நண்பர்கள் தோளில் சுமந்து கொண்டாடினர். இப்போட்டிக்காக, 200 களி உருண்டையும், 20 கிலோ கோழிக்கறியும் தயாரிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை