உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆக.,1 முதல் ஆம்புலன்ஸ் போராட்டம்

ஆக.,1 முதல் ஆம்புலன்ஸ் போராட்டம்

பெங்களூரு: அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். '108' ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பரமசிவா கூறியதாவது: கர்நாடகாவில் 1,700 ஆம்புலன்ஸ்களில் 3,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டில்,108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 12 மணி நேரம் கொண்ட இரண்டு ஷிப்டு நடைமுறைகள் இருந்தன. அப்போது, மாத சம்பளமாக 32,000 முதல் 35,000 ரூபாய் கிடைத்தது. இந்த நடைமுறை எட்டு மணி நேரமாக குறைக்கப்பட்டு, மூன்று ஷிப்டு நடைமுறைக்கு வந்தது. தற்போது பல ஊழியர்களுக்கு 12,000 ரூபாய் மட்டுமே மாத சம்பளம் கிடைக்கிறது. இந்த முறையை மாற்ற வலியுறுத்தி, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை