மேலும் செய்திகள்
பயன்பாடில்லாமல் வீணாகி வரும் அங்கன்வாடி மையம்
04-Jul-2025
யாத்கிர்: அங்கன்வாடி மையத்தில் சிறார்களை வைத்து, பூட்டிவிட்டு, உதவியாளர் தோட்ட வேலைக்குச் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது. யாத்கிர் மாவட்டம், குருமிட்கல் தாலுகாவின், புதுார் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. நேற்று முன் தினம் மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்க, அங்கன்வாடி மையத்தின் தலைமை ஊழியர், வேறு கிராமத்துக்கு சென்றிருந்தார். அங்கன்வாடி மையத்தில் சிறார்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, உதவியாளர் சாவித்ரம்மாவிடம் கொடுத்திருந்தார். ஆனால் சாவித்ரம்மா, சிறார்களை அங்கன்வாடி மையத்தில் வைத்து, கதவை வெளியே பூட்டிக் கொண்டு தோட்ட வேலைக்கு சென்றுவிட்டார். உள்ளே இருந்த குழந்தைகள் பயத்தாலும், பசியாலும் அழத் துவங்கின. நீண்ட நேரமாக குழந்தைகள் அழுததால், அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தபோது, அங்கன்வாடி மையத்தின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. உடனடியாக தலைமை ஊழியருக்கு போன் செய்து, தகவல் கூறினர். அவரும் அங்கு வந்து கதவை திறந்தார். சிறார்களை உள்ளே வைத்து பூட்டி, பொறுப்பின்றி நடந்து கொண்டதை, கிராமத்தினர் கண்டித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
04-Jul-2025